வாட்ஸாப்பின் இந்த வெர்சனை அப்டேட் செய்தால் உங்கள் மீடியா பைல்கள் தொலையும் அபாயம்!

வாட்ஸாப்பின் இந்த வெர்சனை அப்டேட் செய்தால் உங்கள் மீடியா பைல்கள் தொலையும் அபாயம்!


Bug in whatsapp beta version found

வாட்ஸாப் பீட்டா 2.19.66 ஆண்ட்ராய்டு வெர்ஷனை அப்டேட் செய்த பயனாளர்களால் வாட்ஸாப் மீடியா பைல்கள் மற்றும் வாட்ஸாப் ஸ்டேட்டஸினை பார்க்க முடியவில்லை என புகார்கள் எழுந்துள்ளன. 

வாட்ஸாப் நிறுவனமானது ஒவ்வொரு மாதமும் தனது வாடிக்கையாளர்களுக்காக புதிய புதிய வசதிகளுடன் அடுத்தடுத்த வெர்ஷனை வெளியிடுவது வழக்கம். அதையும் முதலில் வாட்ஸாப் பீட்டா பயனாளர்களுக்கு சோதனை நிமித்தமாக சில நாட்கள் வெளியிட்ட பின்பு தான் மற்ற பயனாளர்களுக்கு புதிய அப்டேட்டுகள் வழங்கப்படும். 

அந்த வகையில் சமீபத்தில் வாட்ஸாப் பீட்டா 2.19.66 வெர்ஷன் ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கு வழங்கப்பட்டது. இதனை அப்டேட் செய்த வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியாய் இருந்தது. என்னவெனில், புதிய பீட்டா வெர்ஷனை அப்டேட் செய்த பின்பு அவர்களால் எந்த மீடியா பைல்களையும் பார்க்க முடியவில்லையாம். ஏற்கனவே வந்த மீடியா பைல்களும் கேலரியில் இருந்து அழிந்துள்ளது. 

இதோடு மட்டுமல்லாமல், வாட்ஸாப் ஸ்டேட்டஸில் அவர்களின் கான்டாக்டில் உள்ளவர்களின் டிபியானது கிரே கலரில் தெரிகிறதாம். மேலும் சிலரின் வாடஸாப் ஸ்டேடஸ்கள் வெறும் கருப்பு நிறமாக தான் தோன்றுகிறதாம். 

இந்த தவறுகள் குறித்து வாட்ஸாப் பயனாளர்கள் ட்விட்டரில் பகார் அளித்தனர். இதனை மிகவும் விரைவாக செயல்பட்டு சரிசெய்துள்ள வாட்ஸாப் நிறுவனம் வாட்ஸாப் பீட்டா 2.19.73 என்ற வெர்ஷனை வெளியிட்டுள்ளது. 2.19.66 வெர்ஷனை பயன்படுத்துவோர் உடனடியாக 2.19.73 வெர்ஷனை அப்டேட் செய்துகொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளது.