பூஜையுடன் இனிதே துவங்கிய சூர்யா 46 படம்.! ஹீரோயின் இந்த நடிகையா.! வைரல் புகைப்படங்கள்!!
ஷப்பா.. வெயிலால் மிகவும் அவதிப்படுகிறீர்களா?.. எந்த ஏர்கூலர் வாங்கலாம்?..! குளுகுளு டிப்ஸ்..!!

கோடைகாலம் என்றாலே பலருக்கும் அச்சமாக இருப்பது வெயிலின் தாக்கம் தான். பகல் நேரத்திலும், இரவு நேரத்திலும் வீட்டின் வெப்பநிலை அதிகமாக இருக்கும் என்பதால் பலரும் உறங்குவதற்கு அசௌகரியமாக உணருவார்கள்.
அதேபோல சிலர் ஏசி போன்றவற்றை வாங்கி வைப்பார்கள். நடுத்தர வர்க்கத்தினர் ஏர்கூலர் என்ற எண்ணத்திற்கு இருப்பார்கள். அந்த வகையில் சிறந்த ஏர்கூலர் மற்றும் விலை மலிவானது குறித்து இன்று காணலாம்.
குறைந்தபட்சமாக ரூ.4000-லிருந்து 12,000 வரை இருக்கிறது. அதன் நீர் நிரப்பும் திறன், அதனை உபயோகப்படுத்தப்படும் வசதி போன்றவற்றைப் பொறுத்து விலை மற்றும் தரம் நிர்ணயம் செய்யப்படுகிறது.
அந்த வகையில் கிராம்டன் நிறுவனத்தின் டெஸர்ட் ஏர்கூலர் நாம் வீட்டிற்குள்ளும், வீட்டிற்கு வெளியேயும் உபயோகம் செய்ய வசதி கொண்ட ஏர்கூலர் ஆகும். பஜாஜ் நிறுவனத்தின் டவர் ஃபேன் ஏர் கூலர் அதேபோன்று வசதிகளை கொண்டது.
ஏர்கூலரை பொருத்தவரையில் அதன் நீர் குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தற்போது சந்தைகளில் விற்பனை செய்யப்படும் ஏர்கூலர்களில் கிராம்டன், பஜாஜ் போன்றவை அதிகளவு மக்களால் விரும்பப்படுகிறது.