2 படங்களுக்கு ரூ.957 கோடி சம்பளம்... ஹாலிவுட்டையே மிரள வைத்த ராபர்ட் டௌனி ஜூனியர்!
மொபைலை அடிக்கடி சார்ஜ் போடுறீங்களா.? இந்த டிப்ஸை ஃபாலோவ் செய்யுங்கள்.! சார்ஜ் இறங்காது.!
பெரும்பாலான ஸ்மார்ட்போன் பயனர்கள், தங்களுக்கே தெரியாமல் சில Settings-ஐ எப்போதும் ON-ல வைத்திருப்பார்கள். இதனால் பேட்டரி வேகமாக காலியாகும், மொபைல் சூடாகும், மேலும் செயல்திறனும் குறையலாம். இந்த 5 Settings-ஐ தேவையில்லாத நேரங்களில் OFF செய்வது நல்லது.
முதலாவதாக Bluetooth, GPS (Location) மற்றும் NFC போன்ற அம்சங்களை பயன்படுத்தாத நேரங்களில் OFF செய்து விடுங்கள். இவை பின்னணியில் தொடர்ந்து இயங்குவதால் தேவையற்ற பேட்டரி செலவாகும். பயன்படுத்தும் நேரத்தில் மட்டும் ON செய்தால் போதுமானது.
இரண்டாவதாக Screen Brightness-ஐ Auto Brightness அல்லது குறைந்த அளவில் வைத்துக் கொள்ளுங்கள். அதிக பிரைட்னஸ் பேட்டரியை வேகமாக காலி செய்வதோடு, கண்களுக்கும் சோர்வை ஏற்படுத்தும். Dark Mode பயன்படுத்துவதும் சில மொபைல்களில் பேட்டரி சேமிக்க உதவும்.
இதையும் படிங்க: அன்றாடம் நாம் செய்யும் இந்த பழக்கத்தால்.. வாழ்க்கையே சீரழியும் .. உஷார்.!

மூன்றாவதாக, Background App Refresh மற்றும் தேவையில்லாத App Notifications-ஐ கட்டுப்படுத்துங்கள். பல Apps பின்னணியில் Internet பயன்படுத்தி கொண்டே இருப்பதால் Data மற்றும் Battery இரண்டுமே வீணாகின்றன. பயன்படுத்தாத Apps-க்கு Background அனுமதியை நிறுத்தலாம்.
மேலும் Wi-Fi, Mobile Data, Hotspot போன்றவற்றை தேவையில்லாத நேரங்களில் OFF செய்வதும், Phone Software-ஐ எப்போதும் Update செய்து வைத்திருப்பதும் பேட்டரி ஆயுளை அதிகரிக்க உதவும். இந்த எளிய பழக்கங்கள் உங்கள் மொபைலின் செயல்திறனையும் பேட்டரி ஆயுளையும் கணிசமாக மேம்படுத்தும்.
இதையும் படிங்க: மணி 11 ஆகியும் தூக்கம் வரலையா.? கட்டாயம் இதை செய்யுங்கள்.. அலட்சியம் ஆபத்தை தரலாம்.!