ஊரடங்கை மீறி விளையாடிய சிறுவர்கள்! போலீசாரின் அதிரடி! ஒட்டுமொத்த மக்களையும் சிரிக்க வைத்த வீடியோ!

ஊரடங்கை மீறி விளையாடிய சிறுவர்கள்! போலீசாரின் அதிரடி! ஒட்டுமொத்த மக்களையும் சிரிக்க வைத்த வீடியோ!



youngsters-played-caram-in-144

உலகத்தையே அச்சுறுத்திவரும் கொரோனாவால் நாடுமுழுவதும் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஊரங்கில் வீட்டில் இருக்காமல், பொது இடத்தில் கேரம் விளையாடிய போது, போலீசாரின் ஹெலிகேமில் இருந்து தப்பிக்க, கேரம் போர்டுக்குள் இளைஞன் ஒருவன், மறைந்து கொள்ளும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவர நாடு முழுவதும் வரும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்தநிலையில், திருப்பூரில் பொதுமக்கள் கூடுவதை தவிர்க்க ஹெலிகேம் மூலம் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

திருப்பூர் மாநகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவை மீறி வெளியில் சுற்றும் நபர்களை போலீஸார் டுரோன் கேமார மூலமாகக் கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில், போலீஸார் கணியாம்பூண்டி பகுதியில் செவ்வாய்க்கிழமை டுரோன் கேரமா மூலமாகக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்கிருந்த சிறுவர்கள் மரத்தடியில், ஊரடங்கு உத்தரவை மீறி கூட்டமாக நின்று கேரம் போர்டு விளையாடிக் கொண்டிருந்தனர். இந்த சம்பவத்தை டுரோன் கேமரா மூலமாக படம் பிடித்த போலீஸார் ஒலிபெருக்கி மூலமாக எச்சரித்துள்ளனர். இதில் அச்சமடைந்த சிறுவர்கள் திசைக்கொருவராக தெறித்து ஓடத் துவங்கினர். 

அப்போது அங்கிருந்த ஒரு சிறுவன் புத்திசாலித்தனமாக கேரம்போர்டை தூக்கிக்கொண்டு ஓடியுள்ளார். சற்று தூரம் ஓடிய அந்த சிறுவன் ஓட முடியாமல்,  கேரம்போர்டை மறைத்துக் கொண்டு கீழே உட்கார்ந்து கொண்டு கேமரா முன்பு கேரம் போர்டை வைத்து காட்டியுள்ளான்.

இந்த வீடியோவை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக திருப்பூர் போலீசார் வெளியிட்டுள்ளனர். காமெடி நடிகர் வடிவேலுவின் வசனங்களுடன் வெளியான இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.