தமிழகம்

எப்போ என்ன நடக்கும்னு யாருக்கு தெரியும்!! செல்பி எடுக்க செல்போனை எடுத்திட்டு பாலம் அருகே சென்ற நபர்.. திடீர்னு நடந்த அதிர்ச்சி சம்பவம்..

Summary:

செல்பி எடுக்க முயன்ற இளைஞர் கூவம் ஆற்றுக்குள் தவறிவிழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்பட

செல்பி எடுக்க முயன்ற இளைஞர் கூவம் ஆற்றுக்குள் தவறிவிழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆபத்தான இடங்களில் செல்பி எடுப்பதனால் இன்று பலர் தங்கள் வாழ்க்கையவே இழக்கும் சூழல் உருவாகிவருகிறது. மலை உச்சியில் செல்பி, ரயில் முன் செல்பி, பாம்பு, யானை முன் செல்பி, இப்படி பல நேரங்களில் பலர் பலவிதமான ஆபத்துகளை தேடிச்சென்று தங்கள் வாழ்க்கையவே தொலைத்துவிடுகின்றனர்.

அதுபோன்ற சம்பவம்தான் இது. சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த மூர்த்தி என்னும் நபர் நேப்பியர் பாலம் அருகே செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது அவர் கால் தவறி ஆற்றுக்குள் விழுந்து உயிருக்கு போராடியுள்ளார். உடனே அருகில் இருந்தவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்க, சம்பவ இடத்திற்கு வந்த வீரர்கள் கூவம் ஆற்றுக்குள் இறங்கி அங்கு போராடிக்கொண்டிருந்த இளைஞரை உயிருடன் மீட்டனர்.

ஆற்றில் தண்ணீர் மட்டம் குறைவாக இருந்ததால் அந்த இளைஞர் அதிர்ஷ்டவசமாக உயிரி தப்பியுள்ளார். பின்னர் இளைஞரை கரைக்கு கூட்டிவந்த போலீசார், இனி இதுபோன்று ஆபத்தான செயல்களில் ஈடுபட கூடாது என எச்சரித்து அனுப்பினர்.


Advertisement