தமிழகம்

இப்படி ஒரு மரணம் யாருக்கும் வரக்கூடாது.. கபடி விளையாடிய இளைஞர் நொடியில் மரணம்.. வைரல் வீடியோ

Summary:

கபடி விளையாடிக்கொண்டிருந்த இளைஞர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கபடி விளையாடிக்கொண்டிருந்த இளைஞர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் கடப்பா அருகே உள்ள கங்கையப்பள்ளி என்ற ஊரில் மாவட்ட அளவிலான கபடி போட்டிகள் நடைபெற்றுவருகிறது. இந்த போட்டியில் ஆந்திராவை சேர்ந்த நரேந்திரா என்ற இளைஞர் தனது அணியினருடன் விளையாடுவதற்காக சென்றிருந்தார்.

இந்நிலையில் கபடி போட்டி தொடங்கி, நரேந்திரா எதிர் அணியின் பக்கம் ரைடு சென்றபோது, எதிர் அணி வீரர்கள் நரேந்திராவை எல்லை கோட்டின் அருகே மடக்கி பிடித்து பின்னர் அவரை விடுவித்தனர். இதனை அடுத்து நரேந்திரா அங்கிருந்து நகர முற்பட்டபோது திடீரெனெ முன்பக்கமாக சரிந்து விழுந்து மாரடைப்பால் உயிரிழந்தார்.

இந்நிலையில் இந்த சம்பவத்தின் வீடியோ காட்சி ஒன்று தற்போது வெளியாகி பார்ப்போரை அதிர்ச்சி அடையவைத்துள்ளது.

Credits: Polimer YouTube


Advertisement