ஒரு வருட காதல்.! வெற்றிகரமாக திருநங்கையை கரம்பிடித்த இளைஞர் ! வெளியான சுவாரஸ்ய சம்பவம்!!youngman-got-marriage-with-trangender

கடலூர் மாவட்டம் திருவந்திபுரம் பகுதியில் வசித்து வருபவர்கள் சேகர் அமுதா தம்பதியினர். இவர்களது மகள் அமிர்தா. திருநங்கையான இவர் பிஎஸ்சி முடித்துவிட்டு கிராம அலுவலர் மற்றும் காவல்துறை தேர்வுக்கு படித்து வருகிறார்.

அதேபோல் விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் பகுதியைச் சேர்ந்த லக்ஷ்மன் என்பவர் மும்பையில் சினிமா படப்பிடிப்புகளுக்கு அரங்கம் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

marriage

 இந்நிலையில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு அமிர்தா மும்பையில் வசித்து வந்தபோது அவருக்கு பேஸ்புக் மூலம் லக்ஷ்மன் உடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் இவர்களது நட்பு நாளடைவில் காதலாக மாறியது. இந்த நிலையில் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து பெற்றோரிடம் கேட்டுள்ளனர்.

marriage

தொடக்கத்தில் லக்ஷ்மணின் பெற்றோர்கள் மறுப்பு தெரிவித்து இருந்தாலும், நாளடைவில் அவர்களும் திருமணத்திற்கு சம்மதம் கூறியுள்ளனர்.  பின்னர் இருவீட்டார் சம்மதத்துடன் திருவந்திபுரத்தில் உள்ள ஸ்ரீ தேவநாத சுவாமி திருக்கோவிலில் நேற்று திருமணம் நடைபெற்றுள்ளது. இத்தகைய  திருமண புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.