தமிழகம்

மதுபோதையில் டிக்டாக் லைக்ஸ்க்கு ஆசைப்பட்டு இளைஞர் செய்த காரியம்! இறுதியில் உயிரிழந்த பரிதாபம்!

Summary:

Youngman dead to attempt different try for tiktok

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் காலேகுண்டா அருகிலுள்ள பார்வதி நகரில் வசித்து வந்தவர் சக்திவேல். இவரது மகன் வெற்றிவேல். 22வயது நிறைந்த இவர் கட்டிட மேஸ்திரியாக வேலை பார்த்து வந்துள்ளார். மேலும் இவருக்கு திருமணமாகி 2 வயதில் ஒரு மகன் உள்ளான். இந்நிலையில் சமீபத்தில் வெற்றிவேல் மது அருந்திவிட்டு, தனது நண்பர்கள் இருவருடன் ஓசூர் தேர்பேட்டை பகுதியிலுள்ள ஏரிக்கு மீன் பிடிக்கச் சென்றுள்ளார்.

அப்பொழுது குளத்திலிருந்து மீனை பிடித்த வெற்றிவேல் அதனை கரைக்கு கொண்டுவந்து, தனது நண்பர்களிடம் நான் இந்த மீனை அப்படியே விழுங்கபோகிறேன் அதனை டிக்டாக்கில் வீடியோவாக எடுங்கள் என கூறியுள்ளார்.அதனைத் தொடர்ந்து அவர் உயிருடன் இருந்த மீனை வாயில் போட்டு விழுங்கியுள்ளார். 

இந்நிலையில் மீன் வெற்றிவேலின் சுவாசக்குழாயில் முழுவதுமாக சிக்கியுள்ளது. இதனால் மூச்சு விட முடியாமல் சிரமப்பட்ட வெற்றிவேல் சில நொடிகளிலேயே மயங்கி விழுந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் வெற்றிவேலை மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றுள்ளனர். ஆனால் அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

இந்நிலையில் இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 


Advertisement