கொரோனாவிலிருந்து தங்களது கிராமத்தை காப்பாற்ற இளைஞர்கள் செய்த செயலை பாருங்கள்..!

Younger corona muil veli


younger-corona-muil-veli

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் கோரத்தாண்டவம் அதிகரித்து வரும் நிலையில் அதனை தடுக்க அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் வேலூர் அருகே கொரோனாவை தடுக்க இளைஞர்கள் செய்த செயல் தற்போது வைரலாகி வருகிறது.

வேலூர் மாவட்டம் கொட்டாம்பட்டி பகுதியில் 6 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதனை அடுத்து அப்பகுதி மக்கள் யாரும் வெளியே வராமல் இருக்க வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  இதனால் அப்பகுதி மக்கள் யாவரும் வெளியே வராமல் இருந்து வந்துள்ளனர்.

corona

இந்நிலையில் கொட்டாம்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட கச்சிரயான்பட்டி ஊராட்சி இளைஞர்கள் தங்களது கிராமத்திற்குள் வெளிஊர் நபர்கள் யாரும் வரக்கூடாது என்பதற்காக வெளியிலிருந்து ஊருக்கு வரும் அனைத்து பாதைகளையும் முட்களை கொண்டு அடைத்துள்ளனர்.