தமிழகம்

அந்த 2 பேர் தான் என் சாவுக்கு காரணம்.! இளம்பெண் தற்கொலை.! கடிதத்தில் அம்பலமான அதிர்ச்சி உண்மை.!

Summary:

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள செல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் விமல்ராஜ். இவர

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள செல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் விமல்ராஜ். இவருக்கும் ரேஷ்மா என்ற பெண்ணிற்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிக்கு 2 வயதில் பெண் குழந்தையும், 10 மாதத்தில் ஆண் குழந்தையும் உள்ளன.

இந்தநிலையில் ரேஷ்மாவின் வீட்டிற்கு உறவினர் ஒருவர் வந்து சென்றுள்ளார். ரேஷ்மா வீட்டில் தனியாக இருந்தபோது அவர் அங்கு வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அதே ஊரைச் சேர்ந்த பாலமுருகன் மற்றும் முத்துக்குமார் ஆகிய இருவரும் ரேஷ்மாவின் கணவர் விமல்ராஜிடம் இதுதொடர்பாக கூறியுள்ளனர். இதனால் விமல்ராஜ், ரேஷ்மாவை கண்டித்துள்ளார். 

இதைதொடர்ந்து ரேஷ்மா, தன்னை பற்றி கணவரிடம் ஏன் அவதூறாக கூறினீர்கள் என முத்துக்குமார், பாலமுருகன், ஆகியோரிடம் செல்போனில் பேசி திட்டியுள்ளார். அதற்கு அவர்கள் தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ரேஷ்மா, வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், ரேஷ்மாவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து, ரேஷ்மா எழுதிய கடிதம் ஒன்று சிக்கியது. அந்த கடிதத்தில், எனது மரணத்திற்கு பாலமுருகன், முத்துக்குமார் ஆகியோர்தான் காரணம் என எழுதப்பட்டிருந்தது. இந்தநிலையில், பாலமுருகன், முத்துக்குமார் ஆகிய 2 பேர் மீதும் தற்கொலைக்கு தூண்டியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ரேஷ்மாவின் இந்த விபரீத முடிவால் அவருடைய 2 குழந்தைகளும் தாயை இழந்து தவித்து வருகின்றனர்.


Advertisement