முன்னாள் காதலனுடன் ஓட்டம் பிடித்த இளம் பெண்: வலை வீசும் போலீஸார்..!Young woman on the run with ex-boyfriend: cops casting a net

திருச்சி மாவட்டத்தில் கணவனை விட்டுவிட்டு காதலனுடன் ஓட்டம் பிடித்த இளம் பெண் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி மாவட்டம் பெரிய மிளகு பாறை பகுதியில் வசிப்பவர் 25 வயதுடைய இளம்பெண் இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இவர் திருமணத்திற்கு முன்பு வேறு ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடந்துள்ளது. திருமணத்திற்கு பிறகும் அந்த பெண், தனது முன்னாள் காதலனுடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார்.

இதை அறிந்த அந்த பெண்ணின் கணவர் அவரை கண்டித்துள்ளார். அந்தப் பெண் தொடர்ந்து தனது காதலனுடன் பேசி வந்ததால், கணவன் மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் அந்த பெண் நேற்று முன்தினம் அதிகாலை அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தபோது வீட்டை விட்டு வெளியேறி காதலனுடன் ஓடிவிட்டார். 

இந்த சம்பவம் தொடர்பாக பெண்ணின் தாயார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் காதலனுடன் ஓடிய அந்த பெண்ணை தேடி வருகின்றனர்.