19 வயதில் திருமணம்..! 20 வயதில் பகலில் குழந்தை பெற்ற பெண்ணுக்கு நள்ளிரவில் நடந்த பயங்கரம்..! ஊட்டியில் மர்மமாக நடந்த பயங்கரம்..!
பகலில் குழந்தை பெற்றெடுத்த பெண் இரவில் மரணமடைந்த சம்பவம் நீலகிரியில் பெரும் அதிர்ச்சியை ஏற்பத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள காந்தல் என்னும் பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ். 25 வயதாகும் மோகன்ராஜுக்கும், மாயா என்ற 20 வயது பெண்ணிற்கும் திருமணம் முடிந்த நிலையில் மாயா கற்பமாகியுள்ளார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த மாயாவுக்கு பிரசவவலி ஏற்பட்டதை அடுத்து குடும்பத்தினர் அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
அங்கு மாயாவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் நள்ளிரவில் மாயா மரணமடைந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனை கேட்டு துடித்துப்போன உறவினர்கள் மாயாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். மேலும் மருத்துவமனைக்கு முன்னின்று போராட்டம் நடத்த தொடங்கினர்.

மருத்துவமனைக்கு வந்த போலீசார் மாயாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளநிலையில் மரணத்திற்கான காரணம் குறித்து நிச்சயம் கண்டறியப்படும் எனவும், முறையான விசாரணை நடைபெற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.