நெல்லையில் பயங்கரம்... இளம் பெண் கழுத்தறுத்து கொலை.!! காதல் கணவன் கொடூர செயல்.!!



young-man-murdered-his-beloved-wife-in-tirunelveli

திருநெல்வேலியில் காதல் மனைவி கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக சரணடைந்துள்ள கணவனிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருநெல்வேலியைச் சேர்ந்தவர் அன்புராஜ் (23). இவரும் பிரித்திகா(20) என்ற பெண்ணும் காதலித்து வந்தனர். இவர்களது திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும் இந்த காதல் ஜோடி கடந்த டிசம்பர் 2023 ஆம் வருடம் திருமணம் செய்து கொண்டது. கல்யாணம் முடிந்த நாள் முதல் இவர்களுக்கிடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்திருக்கிறது.

tamilnadu

இந்நிலையில் சம்பவம் நடந்த தினத்தன்று பிரித்திகாவின் தாய் பேசியது தொடர்பாக கணவன் மற்றும் மனைவியிடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த அன்புராஜ் மனைவியின் கழுத்தை துப்பட்டாவால் இறுக்கி கொலை செய்ததோடு அவரது கழுத்தையும் கத்தியால் அறுத்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து அருகிலுள்ள காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

இதையும் படிங்க: "கசந்தது காதல்..." கல்லைப் போட்டுக் கொன்ற மாமனார்.!! குமரியில் பயங்கரம்.!!

அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், இறந்த பிரித்திகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும் சரணடைந்த அன்புராஜ் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. மனைவி, காதல் கணவனால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் திருநெல்வேலியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இதையும் படிங்க: "தலைக்கேறிய போதையில் தாய் மீது பாய்ந்த மகன்..." அடித்தே கொன்ற தந்தை.!!