கணவன் எச்சரித்தும் கள்ளத் தொடர்பை விட மறுத்த வாலிபர்.! அடுத்து நடந்த பயங்கரம்.!



young man murder for illegal affair

சென்னை ஜல்லடியன்பேட்டை நெசவாளர் நகர் ராஜீவ் காந்தி தெருவை சேர்ந்தவர் நரேஷ். 29 வயது நிரம்பிய இவர்  குளிர்சாதன மெக்கானிக் வேலை செய்துவந்துள்ளார். இவர் அதே பகுதியை சேர்ந்த அருண்பாண்டியன் என்பவரின் மனைவியுடன் கள்ள தொடர்பில் இருந்துவந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அருண்பாண்டியனுக்கு தெரியவந்ததால் நரேஷை எச்சரித்துள்ளார். ஆனால் கடந்த 6 மாதங்களாக எச்சரித்தும் கள்ள உறவை விட மறுத்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அருண்பாண்டியன் தனது நண்பர்களுடன் சேர்ந்து நரேஷை கொலை திட்டமிட்டுள்ளார்.

இந்தநிலையில் நரேஷ் தனது இருசக்கர வாகனத்தில் அண்ணா சாலை வழியாக வீடு திரும்பி கொண்டிருந்த போது மர்ம கும்பல் நரேஷை வழிமறித்து அழைத்து சென்று கொடூரமாக கொலை செய்து ஜல்லடையான்பேட்டை ஏரிக்கரையில் சடலத்தை விட்டுச்சென்றுள்ளனர்.

இந்தநிலையில் ஜல்லடையான்பேட்டை ஏரிக்கரையில் கழுத்து மற்றும் மர்ம உறுப்பு அறுத்த நிலையில் ரத்த வெள்ளத்தில் வாலிபர் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்த போது, கள்ள உறவை விட மறுத்ததால் அருண்பாண்டியன் தனது நண்பர்களுடன் சேர்ந்து நரேஷை கொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து அருண்பாண்டியன் மற்றும் அவரது நண்பர்களை போலீசார் தேடிவந்த நிலையில் அருண்பாண்டியன், அவனது நண்பர்கள் திலீப், அருண், சஞ்சய் ஆகியோர் எழும்பூர் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளனர்.