கத்தி முனையில் கஞ்சா குடிக்கிகள் வெறிச்செயல்.. ரத்தத்தை சாப்பிட சொல்லி அட்டகாசம்..! பட்டப்பகலில் பதறவைக்கும் சம்பவம்..!  young man kidnapped by drug addicts

கஞ்சா போதையில் இருவர், ஒரு இளைஞரை இருசக்கர வாகனத்தில் கடத்தி சென்று கொலை செய்ய முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் அருகே வெள்ளியூர் பகுதியை சேர்ந்தவர் சஞ்சய் (வயது 21). இவர் தனது வீட்டின் அருகே உள்ள சாலையில் நின்று கொண்டிருந்த நிலையில், அவ்வழியாக கஞ்சா போதையில் இருசக்கர வாகனத்தில் வந்த பிரபல ரவுடி பில்லாவின் கூட்டாளிகள் இருவர் சஞ்சய் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி கடத்தி சென்றுள்ளனர்.

மேலும் தாமரைப்பாக்கம் அருகே புன்னம்பாக்கம் பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் அவரை அமரவைத்து, மற்றொருவரை வீடியோ காலில் தொடர்பு கொண்டு இவரா எனப் பார்? என்று கூறி சஞ்சையின் கை மற்றும் தலைப்பகுதியில் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதோடு நிறுத்திக் கொள்ளாமல் சாப்பிடும் சாதத்தில் ரத்தத்தை ஊற்றி சாப்பிட சொல்லி துன்புறுத்தியுள்ளனர். 

ஒரு கட்டத்திற்கு பின் கஞ்சா போதையில் இருந்த இருவரும் அங்கேயே படுத்துறங்கிய நிலையில், இளைஞர் அவர்களிடமிருந்து தப்பி வெங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை ஏற்ற காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு சஞ்சையை திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். 

மேலும் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்றபோது கஞ்சா போதையில் இருந்த இருவரும் ஓட்டம் பிடித்த நிலையில், இருவரையும் துரத்தி பிடித்த காவல்துறையினர் அவர்களை காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.