திருமணமான 3 நாளிலேயே விபத்தில் சிக்கி புதுமாப்பிள்ளை பலி... சோகத்தில் குடும்பத்தினர்!!

திருமணமான 3 நாளிலேயே விபத்தில் சிக்கி புதுமாப்பிள்ளை பலி... சோகத்தில் குடும்பத்தினர்!!


Young man died in road accident in Chennai

சென்னை மதுரவாயல் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். கார் டிரைவராக வேலை பார்த்து வரும் இவருக்கும் அண்ணா நகர் செனாய் நகரை சேர்ந்த ஷோபனா என்ற பெண்ணுக்கும் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. 

இந்நிலையில் புதுமண தம்பதியினர் இருவரும் விருந்திற்காக செனாய் நகரில் உள்ள ஷோபனாவின் வீட்டிற்கு சென்றுள்ளனர். மணிகண்டன் தனது மனைவியை வீட்டில் விட்டு தனது நண்பரை காண சென்றுள்ளார். நண்பரை பார்த்து விட்டு வீடு திரும்பிய மணிகண்டன் திடீரென நிலை தடுமாறி இருசக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்துள்ளார்.

chennai

அதில் மணிகண்டன் தலை மற்றும் முகம் ஆகிய இடங்களில் பலத்த காயம் அடைந்த நிலையில் உடனே அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 3 நாளிலேயே மணமகன் உயிரிழந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.