2 ஆம் வகுப்பு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை செய்த கொடூரன்! விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்!young man abused and murder 7 years child

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஏம்பல் கிராமத்தை சேர்ந்த நாகூரான் என்பவரது 7வயது மகள் நேற்று வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். ஆனால் இரவு 7 மணி வரை வீட்டிற்கு வரவில்லை. இதனால் பெற்றோர்கள் அவரை தேடிப்பார்த்துள்ளனர். ஆனால், எங்கு தேடியும் அவர்களது மகள் கிடைக்கவில்லை.

இதனையடுத்து அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் தனது மகள் காணாமல் போய்விட்டார் என்று புகார் அளித்துள்ளனர். இந்தநிலையில், சிறுமியின் வீட்டின் அருகே உள்ள வறண்டு போன ஊரணியில் இருந்து சடலமாக  கண்டெடுக்கப்பட்டது சிறுமியின் உடல். சிறுமியின் தலையில் காயங்கள் இருந்துள்ளன.

abused

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு வந்த புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண்சக்திகுமார், சிறுமி கொலை செய்யப்பட்டு கிடந்த இடத்தைப் நேரில் பார்வையிட்டு, இந்த கொலை சம்பந்தமாக குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

 இதனையடுத்து ,சந்தேகத்தின் பேரில் அப்பகுதியில் கடை வைத்துள்ள ராஜேஷ் (29) என்பவரை பிடித்து விசாரித்தனர். அப்போது சிறுமியைத் தானே வன்கொடுமை செய்து அடித்துக்கொன்றதாக போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதையடுத்து, ராஜேஷை கைது செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.