16 வயதில் திருமணம், 17-ல் சாவு.. பருவவயது காதல் கொடுமையால், வயதுகோளாறு ஜோடி தற்கொலை.. நெஞ்சை உலுக்கும் காதல்..!

16 வயதில் திருமணம், 17-ல் சாவு.. பருவவயது காதல் கொடுமையால், வயதுகோளாறு ஜோடி தற்கொலை.. நெஞ்சை உலுக்கும் காதல்..!


young lovers commited suicide

காதல் ஆசையால் ஆசையாசையாய் திருமணம் செய்த இளம் ஜோடி தற்கொலை செய்துகொண்ட சோகம் நடந்துள்ளது. 

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நாசரேத், சின்னமாடன்குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் தாசன். இவரின் மகன் விஜய் (வயது 17). தாசன் பனைமரம் ஏறும் தொழில் செய்து வருகிறார். இதே ஊரில் வசித்து வருபவர் சுடலைமணி. இவரின் மகள் மேகலா (வயது 16). இருவரும் உறவினர்கள் என்பதால் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. 

இருவரும் தீவிரமாக காதலித்து வந்த நிலையில், பெற்றோருக்கு தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்ய்து குடும்பம் நடத்த தொடங்கியுள்ளனர். மகளை காணாது தேடிய பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரை ஏற்ற காவல் துறையினர் சிறுமியின் வயதுபடி வழக்குப்பதிவு செய்து விஜயை கைது செய்தனர். 

இதனைத்தொடர்ந்து, மேகலாவை அவரின் பெற்றோரிடம் காவல் துறையினர் ஒப்படைக்க, சிறையில் இருந்து ஜாமினில் வந்த விஜய் மீண்டும் மேகலாவிடம் பேசியுள்ளார். இதனை அறிந்த பெற்றோர் கண்டிக்க, வாழ்க்கையில் விரக்தியடைந்த இருவரும் வீட்டில் இருந்து நேற்று இரவில் தலைமறைவாகினர். 

இன்று காலையில் இருவரும் சின்னமாடன்குடியிருப்பு குளக்கரையில் விஷம் குடித்து உயிரிழந்து கிடந்துள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.