நீண்ட நாள் காதல்... வேலை கிடைத்ததும் காதலன் பேச மறுப்பு.! விஷம் குடிச்சுட்டு காவல் நிலையம் வந்த இளம்பெண்.!!

நீண்ட நாள் காதல்... வேலை கிடைத்ததும் காதலன் பேச மறுப்பு.! விஷம் குடிச்சுட்டு காவல் நிலையம் வந்த இளம்பெண்.!!


young girl suicide attempt

நாகர்கோவில் அருகே 25 வயது நிரம்பிய இளம்பெண் கல்லூரியில் படித்த போது, வாலிபர் ஒருவரை காதலித்து வந்தார். இருவரும் நீண்ட நாட்களாக பேசிவந்தநிலையில், கல்லூரி படிப்பு முடிந்ததும் வாலிபருக்கு போலீஸ் வேலை கிடைத்தது. இந்தநிலையில் இவர்களது காதல் விவகாரம் வாலிபரின் வீட்டினருக்கு தெரிய வந்தது. இதனையடுத்து பெற்றோர் கண்டித்ததால் அந்த வாலிபர் காதலியை பார்ப்பதையும், செல்போனில் பேசுவதையும் தவிர்த்து வந்துள்ளார். 

இந்தநிலையில்,தனது காதலன் திடீரென்று தன்னை வெறுக்கின்றானே என மனவேதனை அடைந்த இளம்பெண் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனையடுத்து பெற்றோர் அந்த இளம்பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுதொடர்பாக இளம்பெண் தரப்பில் கொடுக்கப்பட்ட புகாரின்பேரில் அந்த வாலிபரை போலீசார் அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது அந்த வாலிபர் போலீசாரிடம் சில மாதங்களுக்கு பிறகு நான் இந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து அந்த இளம்பெண் சமாதானம் அடைந்தார். பின்னர் மீண்டும் அவர்களது காதல் தொடர்ந்தது. 

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு மீண்டும் அந்த வாலிபர் இளம்பெண்ணுடன் பேசுவதை தவிர்த்துவந்துள்ளார். இதனையடுத்து மீண்டும் அப்பெண் கவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதனையடுத்து போலீசார் இருவரையும் விசாரணைக்காக அழைத்தனர். இந்தநிலையில் இருவரும் நேற்று முன்தினம் காவல் நிலையத்துக்கு வந்திருந்தனர். அப்போது அந்த இளம்பெண் திடீரென மறைவான பகுதிக்கு சென்று தான் கொண்டுவந்திருந்த விஷத்தை அருந்திவிட்டு பாட்டிலுடன் காவல்நிலையத்துக்கு வந்துள்ளார். இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் இளம்பெண்ணை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.