மரப்பெட்டிக்குள் இரண்டு சிறுமிகள் ஒளிந்து கண்ணாமூச்சி விளையாடியபோது, தாழ்ப்பாள் மூடியதால் ஏற்பட்ட கொடூரம்!!

young girl died while playing


young girl died while playing


சென்னை திருவான்மியூர் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் திருப்பதி என்பவரின்  மகள்கள் தனுஸ்ரீ மற்றும் சாரு. இவர்கள் இருவரும் அங்குள்ள அரசு பள்ளியில் படித்துவருகின்றனர். தனுஸ்ரீ 3-ம் வகுப்பும், சாரு, 1-ம் வகுப்பும் படித்து வந்துள்ளனர்.

தற்போது பள்ளிக்கு கோடை விடுமுறை என்பதால் இருவரும் வீட்டில் இருந்துள்ளனர். இந்தநிலையில் நேற்று திருப்பதி வேலைக்கு சென்று விட்டார். அவருடைய மனைவி வீட்டில் சமையல் வேலை செய்து கொண்டிருந்தார். நேற்று மதியம் திருப்பதியின் மகள்கள் இருவரும் வீட்டில் கண்ணாமூச்சி விளையாடி கொண்டிருந்தனர்.

young girl

அப்போது சிறுமிகள் தனுஸ்ரீ, சாரு இருவரும் வீட்டில் இருந்த ஒரு பெரிய மரப்பெட்டிக்குள் இறங்கி பெட்டியின் கதவை மூடி ஒளிந்து கொண்டு விளையாடியுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக பெட்டியின் தாழ்ப்பாள் மூடிக்கொண்டதால் மீண்டும் அவர்களால் கதவை திறந்து கொண்டு வெளியே வரமுடியவில்லை. 

இந்தநிலையில், இருவரும் பெட்டிக்குள் மயங்கி விட்டனர். சமையல் வேலையை முடித்துவிட்டு வந்த சிறுமிகளின் தாயார், அங்கு விளையாடிக்கொண்டிருந்த மகள்கள் இருவரும் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து வீடு முழுவதும் தேடிவிட்டு, அக்கம்பக்கதிலும் தேடிவிட்டு மகள்கள் காணாததால் அதிர்ச்சியடைந்தார்.

young girl

இதனையடுத்து வருத்தத்தில் வீடுதிரும்பிய அவர் எதார்த்தமாக வீட்டில் இருந்த மரப்பெட்டியை திறந்து பார்த்துள்ளார் . அதன் உள்ளே தனது மகள்கள் இருவரும் மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து அலறல் சத்தம் போட்டுள்ளார். இதனையடுத்து இரண்டு சிறுமிகளையம் மருத்துவமனையில் சேர்த்தனர். 

மருத்துவமணையில் சிறுமிகளை பரிசோதனை செய்த மருத்துவர்கள் தனுஸ்ரீ, ஏற்கனவே மூச்சுத்திணறி இறந்துவிட்டதாக தெரிவித்தார். இளைய மகள் சாரு மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினாள். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.