ஒதுக்கு புறமா போகலாம் வா.! நம்பி சென்ற காதலியின் கை கால்களை கட்டி, கற்பழித்து, தலையில் கல்லை போட்டு கொலை செய்த காதலன்! திருச்சி பகீர்!young-girl-died-in-trichy-police-arrest-her-lover

திருச்சி மாவட்டம் மணிகண்டம் அருகே உள்ள வடக்கு நாகமங்கலம் என்னும் பகுதியைச் சேர்ந்த ஒருவர், தனது 16 வயது மகளை கடந்த 31-ஆம் தேதி முதல் காணவில்லை என அருகில் இருந்த காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். 

இதனை அடுத்து விசாரணையை தொடங்கிய போலீசார், திருச்சி மாவட்டம், மணிகண்டம் அருகே வடக்கு நாகமங்கலத்தில் உள்ள காட்டு பகுதியில், நேற்று முன்தினம் ஒரு சிறுமி ஒருவர் கொலை செய்யப்பட்டு சடலமாக  கிடப்பதாக தகவல் கிடைத்துள்ளது .

சம்பவ இடத்திற்கு விரைந்த காணாமல்போன சிறுமியின் உறவினர்கள் இறந்து கிடந்தது காணாமல்போன சிறுமி என்பதை உறுதி செய்தனர். அங்கு சிறுமியின் வாய் மற்றும் கால்கள் துணியால் கட்டப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பதை கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். 

Crime

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டநிலையில்  இந்த வழக்கில் தொடர்புடைய மதிக்குமார் என்பவரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

போலீசார் விசாரணையில், மதிக்குமார் தனக்கும் அந்த சிறுமிக்கும் பழக்கம் இருந்ததாகவும், பின்னர் வேறு ஒருவருடன் மாணவி பழகி வந்ததால் சிறுமியை காட்டுப்பகுதிக்குச் அழைத்துச் சென்று பாலியல் கொடுமை செய்து, பின்னர் தலையில் கல்லை போட்டு கொலை செய்ததாக வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளதாக போலீசார் கூறிஉள்ளன்னர். இந்த வழக்கில் வேறு சிலருக்கும் தொடர்பு இருக்கலாம் என காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.