
சென்னை தண்டையார்பேட்டை பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 4-வது மாடியில் வசித்து வ
சென்னை தண்டையார்பேட்டை பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 4-வது மாடியில் வசித்து வருபவர் ரவிச்சந்திரன். இவருக்கு மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர். ரவிச்சந்திரனின் மகள் அக்ஷயா அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை அக்ஷயா, தனது வீட்டின் மொட்டை மாடியில் சக தோழிகளுடன் சேர்ந்து விளையாடிக்கொண்டு இருந்தார். அப்போது அக்ஷயா மாடியில் இருந்து தவறி கீழே விழுந்துவிட்டார். இதில் பலத்த காயம் அடைந்த அக்ஷயாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுமியின் மரணம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. குழந்தைகள் விளையாடும்பொழுது பெற்றோர்கள் கவனமுடன் இருக்கவேண்டும் என்பதை இச்சம்பவம் உணர்த்தியுள்ளது.
Advertisement
Advertisement