புதுப்பெண்ணிற்கு துடிதுடிக்க நேர்ந்த பரிதாபம்! கணவரின் வீட்டுவாசலில் குழிதோண்டி உறவினர்கள் செய்த அதிர்ச்சி காரியம்! - TamilSpark
TamilSpark Logo
தமிழகம் காதல் – உறவுகள்

புதுப்பெண்ணிற்கு துடிதுடிக்க நேர்ந்த பரிதாபம்! கணவரின் வீட்டுவாசலில் குழிதோண்டி உறவினர்கள் செய்த அதிர்ச்சி காரியம்!

தஞ்சை மாவட்டம் முடச்சிக்காடு என்னும் கிராமத்தில் வசித்து வந்தவர் நவீன்குமார். 30 வயது நிறைந்த இவருக்கு கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு புவனேஸ்வரி என்ற 24 வயது பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் திருமணமான சில நாட்களில் இருந்தே புவனேஸ்வரி மற்றும் நவீன்குமார் இருவருக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்துள்ளது.

 இந்நிலையில் மிகுந்த மனவேதனை அடைந்த புவனேஸ்வரி கடந்த சில தினங்களுக்கு முன்பு உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்துள்ளார்.அதனை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சைபலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் ஆத்திரமடைந்த புவனேஸ்வரியின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் நவீன்குமாரின் வீட்டில் பொருட்களை அடித்து சேதப்படுத்தி,  தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் புவனேஸ்வரியின் உறவினர்கள் இறந்த புவனேஸ்வரியின் உடலை நவீன்குமார் வீட்டுவாசலில் புதைக்க முடிவு செய்து, ஒரு பெரிய இயந்திரம் மூலம் வீட்டின் வாசல் முன்பு பெரிய பள்ளம் தோண்டியுள்ளனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து உறவினர்கள் புவனேஸ்வரியின் சடலத்தை அந்த பெரிய பள்ளத்தில் புதைக்க முயற்சி செய்தபோது தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார்கள் பேச்சுவார்த்தை நடத்தி உறவினர்களை சமாதானம் செய்து வைத்தனர்.

ஆனாலும்,  அதனைத் தொடர்ந்து நேற்று மாலை நவீன்குமார் தோட்டத்தில் புவனேஸ்வரியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து போலீஸ்காரர்கள் புவனேஸ்வரி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo