திருமண ஆசையோடு இருந்த இளம் பெண்!! பக்கத்துவீட்டு பெண் கூறிய ஒற்றை வார்த்தையால் தூக்கில் தொங்கிய சோகம்..

திருமண ஆசையோடு இருந்த இளம் பெண்!! பக்கத்துவீட்டு பெண் கூறிய ஒற்றை வார்த்தையால் தூக்கில் தொங்கிய சோகம்..


Young girl commit suicide who got engaged recently

சீர்காழி அருகே கடவாசல் கிராமத்தில் தண்ணீர் பிடிப்பதில் தகராறு ஏற்பட்டதால் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கடவாசல் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் தீபா. 26 வயதாகும் தீபா பிஎஸ்சி படித்துள்ளார். இந்நிலையில் தீபாவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் பெரியோர்களால் வீட்டில் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சமபவத்தன்று தீபா தனது வீட்டின் அருகே உள்ள பைப்படியில் தண்ணீர்பிடிக்க சென்றுள்ளார்.

அவர் தண்ணீர் பிடித்துக்கொண்டிருந்தபோது பக்கத்து வீட்டில் வசித்து வரும் பாமா மற்றும் பிரபுதாஸ் ஆகிய இரண்டு பேரும் தீபாவிடம் தகராறு செய்துள்ளனர். ஒருகட்டத்தில் இவர்களுக்குள் சண்டை முற்றியதால்  தீபாவிடம் உனக்கு திருமணம் நிச்சயித்த மாப்பிள்ளையிடம் உன்னைப்பற்றி தவறாக கூறி, உன் திருமணத்தை நிறுத்திவிடுவோம் என மிரட்டியுள்ளனர்.

இதைக்கேட்டு மனமுடைந்த தீபா, பயத்தில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக பெண்ணின் தாய் கலாவதி புதுப்பட்டினம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பின்னர் புதுப்பட்டினம் போலீசார்  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீபவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் தீபாவை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து பாமா மற்றும் பிரபுதாஸ் ஆகிய இரண்டு பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.