அதிகாரிகள் அலட்சியம்.! ஆசை மகன் பரிதாப பலி.! சோகத்தில் ஆழ்ந்த அப்பகுதி மக்கள்.!

திருச்சி மாவட்டம் தென்னூர் அன்னை சத்யா நகரை சேர்ந்த பிரேம்குமார்-நளினி தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இவர்களது மூத்த மகன் யஸ்வந்த்(5) நேற்று இரவு வீட்டின் அருகில் விளையாடி கொண்டிருந்தான். அப்போது சிறுவன் திடீரென காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த சிறுவனின் பெற்றோர் மற்றும் அக்கம்பக்கத்தினரும் தேடியுள்ளனர்.
இந்நிலையில் வீட்டின் அருகே சுமார் 5 அடி ஆழமுள்ள சாக்கடையில் விழுந்து யஸ்வந்த் பரிதாபமாக இறந்துள்ளது தெரியவந்தது. இதனைப்பார்த்த சிறுவனின் பெற்றோர் கதறி அழுதுள்ளனர். இதனையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுக்கபட்டுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சிறுவனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமணிக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் பின்னர், சிறுவனின் உடல் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
அப்பகுதியில் கழிவுநீர்க் கால்வாயில் குழந்தைகள் தவறி விழுவது இது முதன்முறையல்ல, இதற்கு முன்னே பலமுறை சிறுவர்கள், குழந்தைகள் அந்த திறந்தவெளி கழிவுநீர்க் கால்வாயில் விழுவது தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. திறந்த வெளியில் உள்ள சாக்கடை மற்றும் கால்வாய்கள் பல ஆண்டுகளாக மூடப்படாமல் இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
திருச்சி மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை இது தொடர்பாக புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவித்தனர். சிறுவன் யஷ்வந்த் அந்தப் பகுதியில் உள்ள அனைவருக்கும் பிடித்த, மிகவும் துருதுவென இருக்கும் சிறுவன் எனவும், சிறுவனின் இறப்பை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை, எனக் கண்ணீருடன் அப்பகுதிமக்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.