இயக்குனர் பாரதிராஜா மகன் தாஜ்மஹால் நாயகன் காலமானார்.! சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!
வழக்கம்போல் ஊஞ்சலில் ஆடிய சிறுவன்! திடீரென கழுத்தில் கயிறு இறுக்கி நேர்ந்த கொடூரம்!

சென்னை அபிராமபுரம் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் 7 வயது மகன் கீர்த்திவாசன் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்துள்ளான்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் கீர்த்திவாசன், தனது வீட்டில் கட்டப்பட்டிருந்த ஊஞ்சலில் விளையாடிக்கொண்டிருந்தபோது ஊஞ்சல் கட்டப்பட்டிருந்த கயிறு, எதிர்பாராதவிதமாக சிறுவனின் கழுத்தை இறுக்கி சிறுவன் மயங்கி விழுந்துள்ளான்.
இதனைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த சிறுவனின் பெற்றோர், கீர்த்திவாசனை மீட்டு அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி கீர்த்திவாசன் பரிதாபமாக உயிரிழந்தான். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கழுத்தில் கயிறு இறுக்கி சிறுவன் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.