சத்தியமா இப்படி ஒரு மரணம் யாருக்கும் வர கூடாது!! மகன் கூறியதை கேட்டு கதறி துடித்த தாய்!! பரிதாபமாக உயிரிழந்த கல்லூரி மாணவர்..

எலிக்காக வைத்திருந்த விஷம் தடவிய வாழைப்பழத்தை சாப்பிட்ட கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தஞ்சை மாவட்டம் மதுக்கூர் அருகே உள்ள சிராங்குடி தெற்கு தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன். வெளிநாட்டில் வேலை பார்த்துவரும் இவருக்கு தமிழ்ச்செல்வி என்ற மனைவியும், கார்த்திக்(19), கவிதாஸ்(15) ஆகிய 2 மகன்களும் உள்ளனர்.
மூத்த மகன் கார்த்திக் தஞ்சையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் BCA முதலாம் ஆண்டு படித்துவந்துள்ளார். இந்நிலையில் கடந்த 18 ஆம் தேதி கார்த்திக் தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டிற்கு வந்தவர், வீட்டில் இருந்த டிவி மீது வைக்கப்பட்டிருந்த வாழைப்பழத்தை எடுத்து சாப்பிட்டுள்ளார்.
பின்னர் இரவு உணவு முடித்துவிட்டு உறங்குவதற்காக சென்ற கார்த்திக் திடீரென வாந்தி எடுத்துள்ளார். உடனே அவரது தாயார் ஏன் வாந்தி எடுக்கிறாய்? என்ன சாப்பிட்டாய் என கேட்டுள்ளார். வீட்டில் டிவி மீது வைக்கப்பட்டிருந்த வாழைப்பழத்தை சாப்பிட்டதாக கார்த்திக் கூற, அவரது தாயாருக்கு தூக்கி வாரிப்போட்டது.
வீட்டில் எலி தொல்லை அதிகம் இருப்பதால், எலிக்காக வைத்திருந்த விஷம் கலந்த வாழைப்பழம் அது என தமிழ்ச்செல்வி கதறி துடித்துள்ளார். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கார்த்திக் மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட கார்த்திக், அங்கு சிகிச்சை பெற்றுவந்தநிலையில் நேற்று சிகிச்சை பழநின்று பரிதாபமாக உயிரிழந்தார்.
எலிக்காக வைக்கப்பட்டிருந்த விஷம் கலந்த வாழைப்பழத்தை சாப்பிட்ட இளம் கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி முழுவதும் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
பெற்றோர்கள் கவனத்திற்கு: வீட்டில் இதுபோன்று சாப்பிடும் பொருட்களில் விஷம் கலந்து வைப்பது மிகவும் ஆபத்தான ஒன்று. அதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடும்போது வீட்டில் உள்ள அனைவர்க்கும் இதுகுறித்து தெரியப்படுத்தவேண்டியது மிக மிக அவசியம். குறிப்பாக வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு இதுபோன்ற பொருட்கள் தெரியாதவாறு, அல்லது எட்டாதவாறு வைப்பதும் மிக மிக அவசியம்.