தமிழகம்

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறுவன்.! விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்.!

Summary:

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்து உள்ள புதுநல்லூர் கிராமத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்மணி வசித்து வருகிறார். இந்த பெண்மணிக்கு அப்பகுதியை சார்ந்த 17 வயது நிரம்பிய தனபால் என்ற சிறுவன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளான். மேலும், இதுகுறித்து யாரிடமாவது சொன்னால், கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளான். 

இந்த விஷயம் குறித்து அறிந்த பெண்ணின் தயார் ஸ்ரீபெரும்புதூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் குற்றம் உறுதியானது. இதனையடுத்து17 வயது சிறுவன் தனபாலை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

தற்போது மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் கைது செய்யப்பட்டுள்ள தனபால் கடந்த 2 வருடத்திற்கு முன்னதாகவே 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதாகி சிறைக்கு சென்று ஜாமினில் வெளியாகியுள்ளான் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement