பள்ளி மாணவியிடம் வீடியோ காட்சிகளை காட்டி மிரட்டி அடிக்கடி பாலியல் தொந்தரவு செய்த வாலிபர்கள்.!

பள்ளி மாணவியிடம் வீடியோ காட்சிகளை காட்டி மிரட்டி அடிக்கடி பாலியல் தொந்தரவு செய்த வாலிபர்கள்.!


young boy abused school girl

திண்டுக்கல் மாவட்டம் சென்னம்ம நாயக்கன்பட்டியை சேர்ந்த முருகேசன் மகன் அஜித் என்பவருக்கும், அதேபகுதியை சேர்ந்த 17 வயது பள்ளி மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. மாணவியை தனிமையில் அழைத்து பாலியல் தொந்தரவு செய்து அதனை தனது செல்போனில் படம் பிடித்து வைத்துள்ளார் விஜய்.

இதுபோல் தாடிக்கொம்பு காமாட்சிபுரம் பகுதியை சேர்ந்த தங்கராஜ் என்ற வாலிபரும் அந்த மாணவியை தனிமையில் அழைத்து பாலியல் தொந்தரவு கொடுத்து அதனை செல்போனில் பதிவு செய்தார். இந்த காட்சிகளை காட்டி அடிக்கடி மாணவியை அழைத்து இருவரும் பாலியல் தொந்தரவு செய்து வந்துள்ளனர்.

ஒருகட்டத்தில் மாணவி இதுதொடர்பாக காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அவரளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அஜித்தை கைது அவரது செல்போனை சோதனை செய்ததில் அவரது செல்போனில் ஏராளமான ஆபாச காட்சிகள் இருந்துள்ளது. இதனையடுத்து தலைமறைவான தங்கராஜையும் போலீசார் தேடி வருகின்றனர்.