இன்று மாலை 6 மணிக்கு முதலமைச்சராக பதவியேற்கிறார் எடியூரப்பா!

இன்று மாலை 6 மணிக்கு முதலமைச்சராக பதவியேற்கிறார் எடியூரப்பா!



yeddyurappa-to-take-oath-at-6-pm-as-karnataka-chief-min


கர்நாடகாவில் அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து 15 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்த நிலையில், முதலமைச்சராக இருந்த குமாரசாமி சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெப்பு கோரினார். 6 நாட்கள் நடந்த விவாதத்துக்குப் பிறகு, வாக்கெடுப்பு நடத்தப்பட்டதில் 99 வாக்குகளே பெற்றதால் அரசு கவிழ்ந்தது. 

அதனைத் தொடர்ந்து, சுயேட்சை எம்.எல்.ஏ சங்கர் மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ரமேஷ் ஜர்க்கிஹோலி, மகேஷ் கும்தஹள்ளி ஆகியோரை அவர்களின் பதவிக்காலம் முடியும் வரை தகுதி நீக்கம் செய்வதாக சபாநாயகர் தெரிவித்தார்.

eddyurappa

இந்நிலையில், கர்நாடகாவில் பா.ஜ.க ஆட்சி அமைக்க ஆளுநர் வஜுபாய் வாலாவிடம், எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பா உரிமை கோரினார். அதனைத் தொடர்ந்து, ஆட்சியமைக்க எடியூரப்பாவுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். இந்தநிலையில் இன்று மாலை 6 மணிக்கு கர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்கிறார்.