திடீரென வந்த ஒரே போன் கால்! வேகமாக ஓடி 5-வது மாடியில் இருந்து குதித்த பெண் சாப்ட்வேர் என்ஜினீயர்!
திடீரென வந்த ஒரே போன் கால்! வேகமாக ஓடி 5-வது மாடியில் இருந்து குதித்த பெண் சாப்ட்வேர் என்ஜினீயர்!

சேலம் மாவட்டத்தை சேர்ந்த அப்பாதுரை என்பவரின் மகள் ஊர்மிளா. 25 வயது நிரம்பிய இவர் சாப்ட்வேர் இஞ்சினியராக வேலை செய்த்துவந்துள்ளார். சென்னை திருப்போரூரை அடுத்த நாவலூரில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில், கடந்த 8 மாதமாக பணிபுரிந்து வந்துள்ளார்.
ஊர்மிளாவிற்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்தநிலையில் இவர் சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் மகளிர் விடுதியில் தங்கி வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்தநிலையில், நேற்று மதியம் ஊர்மிளா அவரது அலுவலகத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது, அவருக்கு போன் வந்தது. அதில் வந்த தகவலை கேட்டு பதட்டம் அடைந்தார்.
இதனையடுத்து அலுவலகத்தின் 5-வது மாடிக்கு வேகமாக சென்ற அவர் அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஊர்மிளாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து உயிரிழந்த பெண்ணின் பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் விசாரணையில் ஊர்மிளாவுக்கு திருமணம் செய்வதற்காக பெற்றோர் மாப்பிள்ளை பார்த்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.