அண்ணி வாங்க.. உங்ககிட்ட பேசணும்.! கொழுந்தனார்களை நம்பி வந்த அண்ணி.! நடுத்தெருவில் நடந்த பயங்கரம்.!women murdered in chennai

சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த  ரூபன் என்பவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சுப்ரியா என்பவருக்கும், திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். சுப்ரியாவும், ரூபனும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஆறு மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ரூபனின் சகோதரர்கள் அவர்களது அண்ணி சுப்ரியாவிடம் பேசவேண்டும் என கூறி அழைத்துச்சென்றுள்ளனர்.

இதனையடுத்து புளியந்தோப்பு பகுதியில் உள்ள குருசாமி நகருக்கு சுப்ரியாவை அழைத்து சென்றுள்ளனர். அப்போது அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சுப்ரியாவை சரமாரியாக வெட்டினர். இந்த நிலையில், சுப்ரியாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். இதனைப்பார்த்த அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடினர்.

Murderஇதனையடுத்து ரத்த வெள்ளத்தில் சரிந்துகிடந்த சுப்ரியா பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சுப்ரியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், ரூபனின் சகோதரர்கள் சுப்ரியாவை கொலை செய்தது தெரிய வந்தது. மனைவி கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்து அங்கு வந்த ரூபனை போலீசார் கைது செய்த நிலையில் அவரது சகோதரர்கள் 4 பேரையும் தேடி வருகின்றனர்.