தமிழகம்

6 வது மாடியில் இருந்து தவறி விழுந்த பெண் மருத்துவர் பரிதாப பலி.!

Summary:

துணிகளை காயப்போட்டபோது மாடியில் இருந்து தவறி விழுந்த பெண் மருத்துவர் பரிதாபமாக உயிரிழந்தார

துணிகளை காயப்போட்டபோது மாடியில் இருந்து தவறி விழுந்த பெண் மருத்துவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கோவை மாவட்டம் உப்பிலிபாளையம் ஸ்ரீவாரி மனோசரோவர் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் மருத்துவர் ராம்குமார். இவருடைய மனைவி வத்சலாதேவி. 56 வயது நிரம்பிய ஐவரும் கோவை அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி, கடந்த 2017-ம் ஆண்டு விருப்ப ஓய்வு பெற்றார். 

இந்தநிலையில் வலிப்பு நோயால் அவதிப்பட்டு வந்த அவர் அதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் வந்துள்ளார். இந்த நிலையில்  வீட்டில் துணிகளை துவைத்த வத்சலாதேவி, அவற்றை காய போடுவதற்காக மொட்டை மாடிக்கு சென்றார். பின்னர் அவர் 6-வது மாடியில் உள்ள அங்கு துணிகளை காயப்போட்டுக்கொண்டு இருந்தார். அப்போது அவருக்கு திடீரென்று வலிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் 6-வது மாடியில் இருந்து அவர் தவறி கீழே விழுந்துள்ளார். இதனால் பலத்த காயமடைந்த வத்சலாதேவி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், வத்சலாதேவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement