தமிழகம்

பசு குறுக்கிட்டு துயரம்... மகனின் கண்முன்னே தாய் உயிரிழப்பு..!

Summary:

பசு குறுக்கிட்டு துயரம்... மகனின் கண்முன்னே தாய் உயிரிழப்பு..!

பசுமாடு குறுக்கே வந்ததால், இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் நிலை தடுமாறி கீழே விழுந்ததில், மகனின் கண் முன்னே தாய் துடிதுடித்து இறந்த சோகம் நிகழ்ந்துள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள கொண்டலாம்பட்டி பகுதியில் வசித்து வந்தவர் தனபாக்கியம். இவர் தனது மகன் பாலகுமாரனுடன் கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற கோயில் திருவிழாவிற்கு சென்றுள்ளார். 

அப்போது இருசக்கர வாகனத்தில் அந்தியூர் வழியே கர்நாடக மாநிலம் சென்ற நிலையில், அந்தியூர் அடுத்த ராமகவுண்டன் என்ற இடத்தில் சென்ற போது சாலையில் பசுமாடு ஒன்று குறுக்கே வந்துள்ளது. இதனால் பாலகுமாரன் இருசக்கர வாகனத்தை கட்டுப்படுத்த இயலாமல் நிலைதடுமாறி கீழே விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில் தாய் தனபாக்கியம் மகனின் கண் முன்னே சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்துள்ளார். பின் இந்த விஷயம் தொடர்பாக தகவலறிந்த அந்தியூர் காவல்துறையினர், பாலகுமாரனின் தாயின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த நிலையில், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Advertisement