தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
கூடைப்பந்தில் வாயில் விறல் வைக்கவைத்த சீன சிறார்களின் பயிற்சித்திறன்; அட்டகாசமான வீடியோ இதோ.!
உலகளவில் வளர்ந்த வல்லரசு நாடாக அமெரிக்கா இருந்தாலும், நாம் என்னவோ ஒருசில விஷயங்களில் சீனாவை பார்த்து போட்டிபோடும் தன்மையை எதிர்கொள்வோம். நம்மை ஆண்ட இங்கிலாந்து நாடு வல்லரசுகளின் பட்டியலில் இருக்கிறது என்பதை கண்டு ஆவேசம் வரவில்லை என்றாலும், சீனாவின் வளர்ச்சி மீது வன்மம் கூட சிலருக்கு இருக்கும். அதற்கு காரணம் சீனா இந்தியாவுக்கு எதிராக ஒருசில விஷயங்களில் முரண்டுபிடித்து எதிர்கொள்ளும் பிரச்சனை தான்.
இன்றளவில் சீன செயலிகள், சீன தயாரிப்புகள் போன்றவை இந்தியர்களின் பாரம்பரியம், எதிர்காலம் போன்றவற்றை கேள்விக்குறியாக்கி வருகிறது. எனினும் நேரடியாக மற்றும் மறைமுகமாக இந்தியாவில் சீன விஷயங்களின் ஊடுருவல் என்பது தவிர்க்க இயலாத ஒன்றாகிவிட்டது.
Basketball training at a school in China
— Science girl (@gunsnrosesgirl3) April 26, 2024
pic.twitter.com/IZrWJhAXtc
இந்நிலையில், சீனாவில் உள்ள பள்ளி ஒன்றில், சிறுவயது குழந்தைகளுக்கு கூடைப்பந்து விளையாட பயிற்சி அளித்துள்ளனர். அதுகுறித்த கலக்கல் காணொளி வெளியாகி வைரலாகி வருகிறது. பார்க்கவே வியக்கும் வைக்கும் திறனுடன் செயல்படும் குழந்தைகளின் ஆற்றல் அளப்பரியது. அதனைப்போல நமது ஊர் குழந்தைகளுக்கும் பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.