தமிழகம்

வரதட்சணையால் மீண்டும் நடந்த கொடூரம்... கணவனின் கொடுமை தாங்காமல் மனைவி தூக்கிட்டு தற்கொலை..! நீதிபதி பரபரப்பு தீர்ப்பு..!

Summary:

வரதட்சணையால் மீண்டும் நடந்த கொடூரம்... கணவனின் கொடுமை தாங்காமல் மனைவி தூக்கிட்டு தற்கொலை..! 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நீதிபதி..!

வரதட்சனை கொடுமையால் தற்கொலை செய்துகொண்ட பெண்ணின் கணவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னையில் உள்ள பூங்காநகர் பல்லவன் சாலையில் வசித்து வருபவர்கள் ராஜா - சுதா தம்பதியினர். தம்பதிகளுக்கு கடந்த 2014ம் ஆண்டு திருமணமாகி 2015ல் குழந்தை பிறந்துள்ளது. இந்த நிலையில் குழந்தைக்கு கடந்த 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் பிறந்த நாள் கொண்டாடப்பட்ட நிலையில், பிறந்தநாளுக்கு பின் திருமணத்தின் போது, 'வரதட்சணையாக பேசப்பட்ட ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், 5 சவரன் நகை ஆகியவற்றை தரவில்லை' எனக் கூறி சுதாவின் கணவரும், நாத்தனாரும் கொடுமைபடுத்தியுள்ளனர்.

இதோடு நிறுத்திக் கொள்ளாமல் குழந்தையின் பிறந்தநாளுக்கு எடுத்த தங்கசங்கிலி மற்றும் வெள்ளி, கொலுசு ஆகியவற்றையும் கேட்டு தொந்தரவு செய்துள்ளனர். ஆனால் சுதா அதனை தரவில்லை என்பதால், அவரை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திக் கொண்டே இருந்துள்ளனர். இதனையெல்லாம் பொறுத்துக் கொண்ட சுதா, ராஜா ஒருநாள் குடும்ப குடிபோதையில் தாக்கியதையும், ராஜாவின் குடும்பத்தினர் வரதட்சனை கொடுமைபடுத்தியதையும் தாங்கிக் கொள்ள முடியாமல் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

பின் இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக திருவல்லிக்கேணி சரக உதவி ஆணையர் விசாரணை நடத்தியதில், இருவரும் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியில் வந்தனர். இந்த வழக்கு தொடர்பாக சென்னை மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி டி.ஹெச்.முகமது முன்னதாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில், நேற்று அவர் தீர்ப்பளித்துள்ளார்.

தீர்ப்பில் மனைவியை வரதட்சணை தரவில்லை எனக் கூறி கொடுமைப்படுத்தியதற்காக ராஜாவுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ராஜாவின் சகோதரியான ஆனந்திக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். இந்த தீர்ப்பை மக்கள் பலரும் வரவேற்றுள்ளனர்.


Advertisement