தமிழகம்

வேண்டாம் அத்தை.. கெஞ்சிய மருமகள்.. மாமியார் செய்த காரியம்.. அவமானம் தாங்காமல் மருமகள் எடுத்த விபரீத முடிவு!

Summary:

கள்ளத்தனமாக மது விற்பனை செய்த மாமியாரால், அவமானம் தாங்க முடியாமல் மருமகள் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளத்தனமாக மது விற்பனை செய்த மாமியாரால், அவமானம் தாங்க முடியாமல் மருமகள் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ளது அருதங்குடி என்ற கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் கமலாம்பாள். இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக கள்ளத்தனமாக வீட்டில் வைத்து மது விற்பனை செய்துவந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கமலாம்பாள் மகன் பாலமுருகனுக்கும், சகுந்தலா என்பவருக்கும் திருமணம் நடந்து அவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில் திருமணத்திற்கு பிறகு தனது மாமியார் கள்ளத்தனமாக மது விற்பனை செய்வதை தெரிந்துகொண்ட சகுந்தலா, இனி மது விற்பனை செய்யக்கூடாது என மாமியாரிடம் சண்டை போட்டுள்ளார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக மாமியார், மருமகள் இடையே அடிக்கடி சண்டை வந்துள்ளது.

இந்நிலையில் ஒருகட்டத்தில் தனது மருமகளின் பேச்சுக்கு மதிப்பு கொடுத்து கமலாம்பாள் மது விற்பனை செய்வதை நிறுத்தியுள்ளார். இதனால் சகுந்தலாவும் நிம்மதியடைந்துள்ளார். இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருவள்ளுவர் தினத்தன்று தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டது.

இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட கமலாம்பாள், மது பாட்டில்களை வாங்கி வந்து வீட்டின் அருகேயுள்ள கீற்று கொட்டகையில் மறைத்துவைத்து மீண்டும் மது விற்பனை செய்துவந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ஊர் மக்கள், கமலாம்பாலின் கீற்று கொட்டகையை அடித்து நொறுக்கியதோடு, காவல் நிலையத்திலும் புகார் கொடுத்துள்ளனர்.

இதனால் போலீசார் கமலாம்பாலை காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தியுள்ளனர். இந்நிலையில் தனது மாமியாரின் செயலால் மிகுந்த அவமானமடைந்த சகுந்தலா, வீட்டில் யாரும் இல்லாதபோது வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டார்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சகுந்தலாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு எடுத்துச்செல்ல முற்பட்டபோது, சகுந்தலாவின் உடலை தர உறவினர்கள் மறுத்தனர். இதனால் ஊர் மக்களுக்கும், போலீசாருக்கும் சிறிதுநேரம் வாக்குவாதம் ஏற்பட்டதை அடுத்து, போலீசார் சகுந்தலாவின் உறவினர்களிடம் எழுத்து மூலமாக எழுதி வாங்கிக் கொண்டு அங்கிருந்து சென்றனர்.

மாமியாரின் செயலால் மருமகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த பகுதி முழுவதும் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.


Advertisement