புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
"எங்க அம்மா வர மாட்டாங்களா.." கணவனால் கோமாவுக்கு சென்ற மனைவி.!! கதறும் குழந்தைகள்.!!
சென்னையில் குடும்பத் தகராறு காரணமாக கணவனால் தாக்கப்பட்ட இளம் பெண் கோமா நிலைக்கு சென்ற சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக அந்தப் பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில் பெற்றோர் இல்லாமல் குழந்தைகள் பரிதவிப்பது காண்போரை கண் கலங்கச் செய்திருக்கிறது.
ஐடி நிறுவன ஊழியர்கள்
சென்னை புழுதிவாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் பரதன். இவருக்கு திருமணமாகி சுரேகா என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர். கணவன் மற்றும் மனைவி இருவரும் சென்னையிலுள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். மேலும் இந்த தம்பதியினரிடையே அடிக்கடி சிறு தகராறுகள் ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.
கணவர் தாக்கியதில் கோமா நிலைக்கு சென்ற மனைவி
இந்நிலையில் கடந்த அக்டோபர் 13ஆம் தேதி இந்த தம்பதியினரின் இளைய மகன் செல்போனில் கேம் விளையாடியதாக தெரிகிறது. இதனை கணவர் கண்டித்திருக்கிறார். இதன் காரணமாக கணவன் மற்றும் மனைவி இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த கணவன் பரதன் தனது மனைவியின் தலையை சுவற்றில் மோதி இருக்கிறார். இந்தக் கொடூர தாக்குதலில் மயக்கமடைந்த சுரேகாவை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாள் முதல் தற்போது வரை சுரேகா மயக்கத்தில் இருந்து மீளாமல் கோமா நிலையில் இருந்து வருகிறார்.
இதையும் படிங்க: "உங்க சாதி வீட்டுல"., 26 வயது காதலியை கர்ப்பமாக்கி, அம்போவென தவிக்கவிட்ட இளம்பாடகர்.. நியாயம் கேட்டு பெண் குமுறல்.!
பரிதவிக்கும் குழந்தைகள்
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை நடத்திய விசாரணையை தொடர்ந்து மனைவியின் மீது தாக்குதல் நடத்திய பரதன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார். இந்தக் குடும்ப வன்முறை குறித்து அவரிடம் காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். தாய் மருத்துவமனையில் கோமா நிலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் தந்தையும் காவல்துறையால் கைது செய்யப்பட்டிருப்பதால் பெற்றோர்கள் இல்லாமல் அவர்களது 2 மகன்களும் பரிதவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: "தீபாவளிக்கு வீட்டுக்கு வாயா மஜாவா இருக்கலாம்.." ஓனருடன் கள்ளக்காதல்.!! கணவன் கொலை.!!