தமிழகம்

ஏரியில் சடலமாக மிதந்த இளம்தாய்! உடன் சென்ற 8 மாத குழந்தையின் நிலை என்ன! அதிர்ச்சி சம்பவம்!

Summary:

Woman commit suicide for fight with husband

ஆவடியை அடுத்த திருவள்ளூர் தெருவை சேர்ந்தவர் பாலாஜி. இவர் டைல்ஸ் ஒட்டும் வேலை பார்த்து வருகிறார். பாலாஜி கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு புவனேஸ்வரி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் புவனேஸ்வரி தனியார் மழலையர் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார்.பாலாஜி அடிக்கடி புவனேஸ்வரியிடம் சண்டை போட்டு அவரை மோசமான கெட்ட வார்த்தைகளால் திட்டிவந்துள்ளார்.

இதனால் கடந்த சில மாதங்களுக்கு முன்புகூட புவனேஸ்வரி  தற்கொலைக்கு முயன்று பின்னர் சமாதானமாகி தனது கணவருடன் சேர்ந்து வாழ்ந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த வாரம் கணவருடன் தகராறு ஏற்பட்ட நிலையில் புவனேஸ்வரி கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு, தனது 8 மாத குழந்தையுடன் மாயமானார். இதனால் அதிர்ச்சியடைந்த பாலாஜி உடனே இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அதனை தொடர்ந்து போலீசார் தீவிர தேடுதலில் ஈடுபட்டு வந்தநிலையில் நேற்று காலை சேக்காடு பாலாஜி நகர் அருகிலுள்ள கோவிந்தன் தாங்கல் ஏரியில் புவனேஸ்வரி சடலமாக மிதந்துள்ளார். பின்னர் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து புவனேஸ்வரியின் சடலத்தை மீட்டனர். இந்நிலையில் அவர் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் சந்தேகப்பட்டநிலையில்,  அவருடன் சென்ற 8 மாத குழந்தையின் சடலமும் ஏரியில் உள்ளதா எனவும் தேடியுள்ளனர். ஆனால் குழந்தையின் சடலம் எதுவும் கிடைக்கவில்லை. 

இந்நிலையில் போலீசார்கள் புவனேஸ்வரி குழந்தையை வேறு யாரிடமாவது கொடுத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டாரா, குழந்தையின் நிலை என்ன என தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது


Advertisement