மனைவியின் பிறந்தநாள் அன்று தலைக்கேறிய போதையில் வீட்டிற்கு வந்த கணவன்.! மனைவி எடுத்த விபரீத முடிவு.!

மனைவியின் பிறந்தநாள் அன்று தலைக்கேறிய போதையில் வீட்டிற்கு வந்த கணவன்.! மனைவி எடுத்த விபரீத முடிவு.!


wife suicide for husband drunk

சென்னை பொழிச்சலூர் வேதாச்சலம் நகரை சேர்ந்தவர் சாமுவேல். 21 வயது நிரம்பிய பெயிண்டிங் வேலை செய்துவந்துள்ளார். இவர், அதே பகுதியை சேர்ந்த தனுஜா இளம்பெண்ணை காதலித்து, 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார்.

இந்தநிலையில் தனுஜாவுக்கு 2 நாட்களுக்கு பிறந்த நாள் வந்துள்ளது. இதனால் தனது பிறந்தநாளை தனது காதல் கணவனுடன் வெளியில் சென்று கொண்டாட ஆசைப்பட்டுள்ளார். இந்தநிலையில் பிறந்தநாள் அன்று தனுஜா தன்னை வெளியில் அழைத்து செல்லும்படி காதல் கணவர் சாமுவேலிடம் கூறியுள்ளார்.

ஆனால் சாமுவேல் தனது மனைவியின் பிறந்தநாள் அன்று தலைக்கேறிய போதையில் வீட்டுக்கு வந்துள்ளார். இதனால் மனம் உடைந்த தனுஜா, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.