தமிழகம்

கணவர் உயிரிழந்த சோகம்! திடீரென ஆற்றில் குதித்த மனைவி! தஞ்சையில் நடந்த துயரச் சம்பவம்!

Summary:

wife suicide for husband death

தஞ்சாவூர் மாவட்டம் மேல அலங்கத்தைச் சேர்ந்தவர் வீரமணி. இவர் 15 நாள்களுக்கு முன்பு உடல் நலக் குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். வீரமணியின் மனைவி நீலாவதி கணவன் இறந்த சோகத்தில் இருந்து வந்துள்ளார். வீரமணி- நீலாவதி தம்பதிக்கு ஒரு மகன் இருந்துள்ளார்.

இந்நிலையில், கணவன் இறந்ததால் மனமுடைந்த நிலையில் காணப்பட்டு வந்த நீலாவதி சனிக்கிழமை காலை தஞ்சை பெரியகோயில் அருகேயுள்ள கல்லணைக் கால்வாயில் குதித்துள்ளார். தற்போது ஆற்றில் தண்ணீர் வேகமாக செல்வதால் அவர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டார். 

நீலாவதி தண்ணீரில் அடித்து செல்லப்படுவதைப் பார்த்த பொதுமக்கள் தீயணைப்புத் துறைக்குத் தகவல் கொடுத்துள்ளனர். தண்ணீரில் தத்தளித்த அவர் சிறிது நேரத்தில் மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த தஞ்சை தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து ஆற்றில் குதித்து நீலாவதியை தேடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement