கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு.! கணவனின் லீலைகளை அம்பலப்படுத்திவிட்டு மனைவி எடுத்த விபரீத முடிவு.!
கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு.! கணவனின் லீலைகளை அம்பலப்படுத்திவிட்டு மனைவி எடுத்த விபரீத முடிவு.!

சென்னை விருகம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் தங்கதுரை. இவர் தனது மனைவி ஜெயலட்சுமியுடன் விருகம்பாக்கம், சுப்பிரமணி தெருவில் வசித்துவந்துள்ளார். தங்கதுரைக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்தநிலையில் சில தினங்களுக்கு முன்பு இது தொடர்பாக இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனவேதனை அடைந்த ஜெயலட்சுமி, தற்கொலை செய்ய முடிவெடுத்துள்ளார். ஆனாலும் தனது கணவனின் லீலைகளை உறவினர்களிடம் தெரிவித்துவிட்டு தற்கொலை செய்துள்ளார். தனது கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாகவும், இதனால் தன்னை அடித்து சித்ரவதை செய்வதாகவும் கூறி தனது உறவினர்களுக்கு எஸ்.எம்.எஸ். மற்றும் ஆடியோ பதிவு ஒன்றை அனுப்பி வைத்ததாக தெரிகிறது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் ஜெயலட்சுமி தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஜெயலட்சுமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தநிலையில், ஜெயலட்சுமியின் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது உறவினர் ஒருவர் கவல்த்துறையில் புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து ஜெயலட்சுமியின் கணவர் தங்கதுரையிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், தங்கதுரைக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது உறுதியானது. இதையடுத்து ஜெயலட்சுமியை தற்கொலைக்கு தூண்டியதாக தங்கதுரை மீது வழக்குப்பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.