தமிழகம்

மனைவியை காரில் தனியாக அழைத்துச் சென்று கணவன் செய்த காரியம்!! இணையத்தில்வீடியோ பதிவிட்டு தப்பிச் சென்ற கணவன்!!

Summary:

மனைவியை காரில் தனியாக அழைத்துச் சென்று கணவன் செய்த காரியம்!! வலையதளங்களில் வீடியோ பதிவிட்டு தப்பிச் சென்ற கணவன்!!

திருப்பத்தூர் அருகே புதுப்பூங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி 30 வயது நிரம்பிய இவர் ஓட்டுநர் பயிற்சி பள்ளி நடத்தி வருகிறார். இவருக்கு திவ்யா என்ற பெண்ணுடன் திருமணமாகி இந்த தம்பதிக்கு 3 வயதில் மகள் ஒருவர் உள்ளார். இவர்களுக்கிடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாக மனைவி திவ்யா இரண்டு வாரங்களுக்கு முன் தன் தாயார் வீட்டிற்குச் சென்றுள்ளார். 

இதனையடுத்து சத்தியமூர்த்தி நேற்று மாமியார் வீட்டுக்கு சென்று சனிக்கிழமை புரட்டாசி என்பதால்,கோவிலுக்குச் செல்லலாம் என்று தன் மனைவியிடம் கூறி, மனைவி மற்றும் குழந்தையை காரில் ஏற்றி கொண்டு எலவம்பட்டி அருகே மறைவான இடத்தில் காரை நிறுத்திவிட்டு மனைவி மீது திடீரென பெட்ரோலை ஊற்றி கொலுத்திவிட்டு ,தன் குழந்தையுடன் தப்பித்து விட்டார். பலத்த தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிய திவ்யாவை மீட்ட பொதுமக்கள் மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதனையடுத்து  தப்பியோடிய சத்தியமூர்த்தி சமூக வலையதளங்களில் வீடியோ ஒன்றை பதிவிட்டு, தனது செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டார். அந்த வீடியோவில் அவர், தான் திருப்பத்தூரில் ஓட்டுநர் பயிற்ச்சி பள்ளி நடத்தி வந்ததாகவும், எனக்கு இரண்டு சிறுநீரகங்கள் செயலிழந்து விட்டதாகவும், நான் இறந்து விட்டால் என் மனைவி மற்றும் குழத்தையை யாரும் பார்க்கமாட்டார்கள் அதனால் மனைவி , மகளை கொன்று விட்டு தானும் தற்கொலை செய்யப்போகிறேன், யாரும் என்னை தேட வேண்டாம் என்று கூறியுள்ளார். இந்த வீடியோ வைரலான நிலையில் இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.


Advertisement