தமிழகம்

பாட்டி பாக்குறதுக்குத்தான் அப்பாவி மாதிரி!! ஆனால் செஞ்ச காரியம் இருக்கே!! 3 கோடி ரூபாய் இன்சூரன்ஸ் பணத்திற்காக கணவனை கொன்ற கொடூரம்..

Summary:

3 கோடி ரூபாய் இன்சூரன்ஸ் பணத்திற்காக சொந்த கணவனை மனைவியே பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொலை செய்

3 கோடி ரூபாய் இன்சூரன்ஸ் பணத்திற்காக சொந்த கணவனை மனைவியே பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்த துடுப்பதியை சேர்ந்தவர் ரங்கராஜன் (62). இவரது மனைவி ஜோதிமணி. ரங்கராஜன் விசைத்தறி மற்றும் ரியல் எஸ்டேட் போன்ற தொழில்களை செய்துவந்துள்ளார். இந்நிலையில் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக ரங்கராஜனுக்கு 1 கோடி ரூபாய் கடன் இருந்துள்ளது.

இந்நிலையில் ரங்கராஜனுக்கு சமீபத்தில் காலில் காயம் ஏற்பட்டுள்ளது. அதற்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். சிகிச்சை முடிந்து ரங்கராஜனை அவரது மனைவி ஜோதிமணி மற்றும் உறவினர் ராஜா ஆகியோர் டிஸ்சார்ஜ் செய்து, ஆம்னி வேனில் அழைத்துச் சென்றுள்ளனர்.

அவர்கள் சென்றுகொண்டிருந்த வேன், திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருகே சென்றுகொண்டிருந்தபோது தீ பிடித்து எரிந்ததால் ரங்கராஜன் காரிலையே இறந்துவிட்டதாகவும், தாங்கள் இருவரும் காரில் இருந்து இறங்கி தப்பிவிட்டதாகவும் ஜோதிமணி போலீஸ் விசாரணையில் கூறியுள்ளார்.

ஆனால் அவர் கூறியதில் சந்தேகமடைந்த போலீசார், ஜோதிமணியை மேலும் விசாரித்தபோது பல திடுக்கிடும் தகவல்களை கூறியுள்ளார். ஆம், தனது கணவரின் பெயரில் 3 கோடி ரூபாய் இன்சூரன்ஸ் இருப்பதாகவும், அந்த பணத்திற்கு தான்தான் நாமினி என்பதால், கணவர் இறந்துவிட்டால் அந்த பணம் முழுவதும் தனக்கே வந்துவிடும் எனவும், அதைவைத்து 1 கோடி ரூபாய் கடனை அடைத்துவிட எண்ணி, தனது கணவனை காரில் வைத்து, பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்ததாகவும்  ஜோதிமணி விசாரணையில் கூறியுள்ளார்.

இதனையடுத்து ஜோதிமணி, ராஜா ஆகியோரை போலிஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இன்சூரன்ஸ் பணத்திற்காக இத்தனை ஆண்டுகளாக தன்னுடன் வாழ்ந்த கணவனை மனைவியே எரித்து கொலை செய்த சம்பவம் அந்த பகுதி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement