தமிழகம் காதல் – உறவுகள்

ஒரே டார்ச்சர்! இரண்டு முறை விஷம் கொடுத்தும் சாகவில்லை! அதான்... கணவரை கொடூரமாக போட்டுத்தள்ளிய மனைவி! வெளியான பகீர் காரணம்!

Summary:

wife killed husband for toture brother wife

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகேயுள்ள சின்னமனூர் என்னும் பகுதியில் வசித்து வந்தவர் ரமேஷ்குமார். இவரது மனைவி நித்யா. இந்நிலையில் ரமேஷ் குமார் கடந்த சில தினங்களுக்கு முன்பு மதுபான கடைக்கு பின்னால் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். இந்நிலையில் ரமேஷ்குமாரின் மனைவியிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளார். 

இதனைத்தொடர்ந்து போலீசார் அவரிடம் கிடுக்கிபிடி விசாரணையில் மேற்கொண்ட நிலையில் அவர் பல அதிர்ச்சிகரமான தகவல்களை கூறியுள்ளார்.ரமேஷ்குமார் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். மேலும் வீட்டில் உள்ள பணத்தையும் வீணாக செலவழித்து வந்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. அதுமட்டுமின்றி ரமேஷ்குமார் வீட்டில் தனியாக இருந்த நித்யாவின் சகோதரர் அரவிந்தனின் மனைவியிடம் அத்துமீறி நடந்துள்ளார். இதில் கோபித்துக்கொண்டு அவர் கணவரை விட்டுவிட்டு,  தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். 

drinking liquorக்கான பட முடிவுகள்

மேலும் நித்யாவிற்கு அவரது தம்பி அரவிந்தனின் நண்பன் கணபதி என்பவருடன் தகாத உறவு இருந்துள்ளது. அவர்களுக்கும் ரமேஷ்குமார் தொல்லையாக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நித்யா, அரவிந்தன் மற்றும் கணபதியுடன் சேர்ந்து ரமேஷ் குமாரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து நித்யா ரமேஷ்குமாருக்கு இருமுறை மதுவில் விஷம் கலந்து கொடுத்துள்ளார். ஆனால் இதில் ரமேஷ்குமார் மயக்கம் மட்டுமே அடைந்துள்ளார் உயிரிழக்கவில்லை.

பின்னர் சில நாட்களுக்குப் பிறகு மீண்டும் மதுவில் விஷத்தை கலந்து, அவர் மயக்கமடைந்த நிலையில் தலையில் கல்லை போட்டு கொலை செய்துள்ளதாக கூறியுள்ளனர். அதனை தொடர்ந்து போலீசார் நித்யா மற்றும் அவரது சகோதரர் அரவிந்தனை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 


Advertisement