கணவன் மனைவிக்கிடையே மாறுபட்ட ஆசை!. மகனை கொன்றுவிட்டு மனைவி செய்த செயல்!.



wife killed her son and suicide

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள அய்யம்பட்டி வள்ளாலகண்ட அய்யனார் கோவில் தெருவில் வசித்து வருபவர் முருகன். இவர் துவாக்குடி அரசு போக்குவரத்து பணிமனையில் பேருந்து நடத்துனராக செயல்பட்டு வருகிறார். 

முருகனுக்கு  கோமதி என்கிற மனைவியும் 11-ஆம் வகுப்பு படிக்கும் நந்தினி என்கிற மகளும், 9-வது வகுப்பு படிக்கும் சரவணன் என்கிற மகனும் உள்ளனர்.

முருகனுக்கு தனது சொந்தஊரில் நிலம் வாங்கி வீடு கட்ட வேண்டும் என்பது ஆசை. ஆனால், இது கோமதிக்கு பிடிக்கவில்ல. இந்த நிலையில் முருகனின் மனைவிக்கு அவரின் சொந்த ஊரான மாங்காவனம் பகுதியிலோ அல்லது திருச்சி நகருக்குள்தான் வீடு கட்ட வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது.

அந்த விருப்பத்தை தன் கணவர் முருகனிடம் கூறினார். ஆனால் அதில் முருகனுக்கு விருப்பமில்லை. இது தொடர்பாக கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது. இதனை தொடர்ந்து முருகன் ஆசை படி அவர் விரும்பிய இடத்தில் பூமி பூஜை நடத்தியதோடு வீடு கட்டுவதற்கான வேலைகளையும் தொடங்கினார்.

                    husband and wife

நேற்று காலை அவர்களது வீட்டில் முருகனின் மகள் நந்தினி எழுந்து பார்த்தபோது தாய் கோமதியும், தம்பி சரவணனும் படுத்திருக்கும் அறை திறக்காததை பார்த்து கதவை தட்டி உள்ளார்.

ஆனால், கதவு திறக்கப் படவில்லை. இதனால் பதற்றமான நந்தினி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஜன்னலை திறந்து பார்த்தார். அங்கு, தாயார் கோமதி தூக்கில் தொங்கியள்ளார். விசாரணையில் மகனை கழுத்தை அறுத்து கொன்று விட்டு கோமதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.