தமிழகம்

போதையில் தூங்கி கொண்டிருந்த கணவன்.! மனைவி செய்த கொடூர செயல்.! வாக்குமூலம் கொடுத்துவிட்டு உயிரை விட்ட கணவன்.!

Summary:

சென்னை பள்ளிக்கரணை அடுத்துள்ள கைவேலி பகுதியை சோ்ந்தவா் பாண்டி. இவருக்கு பார்வதி என்ற பெண்ண

சென்னை பள்ளிக்கரணை அடுத்துள்ள கைவேலி பகுதியை சோ்ந்தவா் பாண்டி. இவருக்கு பார்வதி என்ற பெண்ணுடன் திருமணமாகி இந்த தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனா். சலவைத்தொழில் செய்துவந்த பாண்டிக்கு கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக சரியான வருமானம் இல்லாமல் இருந்துள்ளது. 

இந்தநிலையில் தினமும் மது அருந்திவிட்டு பாண்டி மனைவி இடையே அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளார். இந்தநிலையில் நேற்று மாலை கணவன் மனைவிக்கு இடையே சண்டை ஏற்பட்டது. அப்போது பாண்டி தனது மனைவியை அடித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து பாண்டி போதையில் படுத்து தூங்கி விட்டார். இதனையடுத்து பாண்டியின் வீட்டிற்குள் அவரது அலறல் சத்தம் கேட்டுள்ளது. அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் கதவை திறந்து பார்த்தபோது பாண்டியின் உடலில் தீ எரிந்து கொண்டிருந்துள்ளது.

இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் எரிந்த தீயை அணைத்து உயிருக்கு போராடிய பாண்டியை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பாண்டியின் மனைவி பார்வதி, தனது கணவர் பாண்டிதான், அவரது உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து மருத்துவமணியில் உயிருக்கு போராடிய பாண்டி, தனது மனைவிதான் தன் மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்து விட்டு, தான் தப்பிச்செல்லாமல் இருக்க வீட்டின் கதவை வெளியே பூட்டிவிட்டார் என்று வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதனையடுத்து பாண்டி, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து போலீசார் பார்வதி மீது கொலை வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனா். இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
 


Advertisement