தமிழகம்

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்த இளம்பெண்! விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்!

Summary:

wife killed her husband for her illegal affairs.

மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியைச் சேர்ந்த தென்னரசு என்பவர் அதே பகுதியில் ஒர்க்‌ஷாப் நடத்தி வந்துள்ளார். இவருக்கு விஜயலட்சுமி என்ற பெண்ணுடன் திருமணமாகி  2 குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் கடந்த 15-ஆம் தேதி வீட்டில் தூங்கிய தென்னரசுஅதிகாலையில்  பிணமாக கிடந்ததாக கூறி, அவரது மனைவி மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். 

மருத்துவமனையில் தென்னரசுவின் உடல் பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனையடுத்து அவரது சொந்த ஊரில் தென்னரசுவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. 

ஆனால் தென்னரசுவின் பெற்றோரும், உறவினர்களும் அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக காவல்துறையில் புகார் செய்தனர். இந்தநிலையில் தென்னரசுவின் உடல் பரிசோதனை அறிக்கையில், அவரது கழுத்து பகுதி இறுக்கப்பட்டு இருந்ததாக கூறப்பட்டது. இதையடுத்து போலீசார், அவரது மனைவி விஜயலட்சுமியிடம் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர்.

போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், தென்னரசுவை அவரது மனைவி தான் கொலை செய்தது என்பது தெரியவந்தது. தென்னரசுவின் ஒர்க்‌ஷாப்பில் கார் டிரைவராக சரவணக்குமார் என்பவருக்கும், தென்னரசுவின் மனைவி விஜயலட்சுமிக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இந்த விஷயம் தென்னரசுவுக்கு தெரிந்து, 2 பேரையும் அவர் கண்டித்துள்ளார். 

ஆனாலும், அவருக்கும், டிரைவர் சரவணக்குமாருக்கும் இடையிலான பழக்கம் தொடர்ந்து வந்தது. ஆனால் அவர்களது பழக்கத்திற்கு தென்னரசு இடையூறாக இருந்ததாக கருதி, அவரை கொலை செய்ய திட்டமிட்டு சம்பவத்தன்று இரவு தென்னரசுவை அளவுக்கு அதிகமாக மது குடிக்க வைத்துள்ளனர். அவர் போதையில் இருந்தபோது அவரது கழுத்தை இறுக்கி இருவரும் கொலை செய்துள்ளனர். இதனையடுத்து போலீசார் விஜயலட்சுமியையும், சரவணக்குமாரையும் கைது செய்தனர்.


Advertisement