தமிழகம்

நடத்தையில் சந்தேகப்பட்ட குடிகார கணவன்.! தம்பியுடன் சேர்ந்து மனைவி செய்த செயல்.! அதிர்ச்சி சம்பவம்.!

Summary:

சென்னை மைலாப்பூர் பகுதியை சேர்ந்தவர் கபாலி. 48 வயது நிரம்பிய அவருக்கு வனிதா என்ற மனைவியும்

சென்னை மைலாப்பூர் பகுதியை சேர்ந்தவர் கபாலி. 48 வயது நிரம்பிய அவருக்கு வனிதா என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர். பெயிண்டிங் மற்றும் வெல்டிங் வேலை செய்த்து வந்த அவர், கடந்த சனிக்கிழமை தனது வீட்டில் இரத்த வெள்ளத்தில் பினமாக கிடந்துள்ளார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கபாலியின் உடலை மீட்டு பிரதே பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில், கபாலியின் மனைவி வனிதா கொடுத்த வாக்குமூலம் போலீசாரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

தனது கணவன் தன்னை நடத்தையில் சந்தேகப்பட்டு, தினமும் குடித்துவிட்டு வந்து சித்திரவதை செய்துவந்ததாகவும், இதனால் கணவனின் கொடுமையை பொறுக்கமுடியாமல் தனது தம்பையுடன் சேர்ந்து திட்டமிட்டு கொலை செய்ததாகவும் ஒப்புக்கொண்டார். வனிதா தனது தம்பி சாந்தகுமாரை வீட்டிற்கு வரவழைத்து, கபாலியின் தலையில் சிலிண்டரை போட்டு கொலை செய்துவிட்டதாக தெரிவித்தார். இந்நிலையில், வனிதா மற்றும் அவரது தம்பி சாந்தகுமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement