மகனின் பிறந்த நாளுக்காக புதுஆடைகள் எடுக்கச்சென்ற மனைவி!! அன்றிரவே கணவருக்கு காத்திருந்த பேரிடி!!

Wife killed and throw in bond


Wife killed and throw in bond

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் வசித்து வருபவர் செந்தில். அவரது மனைவி ஷோபனா. அவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். ஷோபனா திருச்செங்கோட்டில் உள்ள பியூட்டி பார்லர் ஒன்றில் உதவியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். 

இந்நிலையில் அவர் தனது மூத்த மகனின் பிறந்தநாளுக்கு டிரஸ் எடுப்பதற்காக நேற்று முன்தினம் ஈரோடு சென்றுள்ளார்.  அப்பொழுது இரவு நீண்ட நேரம் ஆனநிலையில் ஷோபனா அவரது கணவருக்கு போன் செய்து பேருந்து எதுவும் இல்லை எனவே தெரிந்தவர்களின் காரில் வருகிறேன் என கூறியுள்ளார். 

deadஆனால் நீண்ட நேரமாகியும் ஷோபனா வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது கணவர் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில், ஷோபனா திருச்செங்கோடு அருகேயுள்ள விட்டம்பாளையம் என்ற பகுதியின் அருகிலுள்ள குட்டையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். மேலும் மகனின் பிறந்த நாளுக்காக எடுக்கப்பட்ட டிரஸ் மற்றும் சாக்லேட் ஆங்காங்கு கிடந்துள்ளது. 

இதையடுத்து அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இக்கொலை குறித்து தீவிர விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.